கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி பண்டிகை முகூர்த்தக்கால் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2015 11:07
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப் பண்டிகைக்கான முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலின் ஆடிப்பண்டிகை, ஜூலை, 27ல் துவங்கி, ஆகஸ்ட், 9 வரை, நடக்கிறது. இப்பண்டிகைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்க்கொண்டு வருகிறது. பண்டிகைக்கான முகூர்த்தக்கால் விழா நேற்று காலை கோவில் வளாகத்தில் நடந்தது. முகூர்த்தக் கால் நடப்பட்டதை அடுத்து, பண்டிகைக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.