கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட சிவகாமிபுரம் கூனியம்மன் கோயிலில் 29 வது ஆண்டு முளைக்கொட்டு உற்சவ விழா, கடந்த ஜூன் 30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவில் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் கீழக்கரை சித்திவிநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள்அலகுகுத்தி பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.