சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி ஆகியோர் பூஜைகளை செய்தனர். தாசில்தார் பாலசுப்ரமணியன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்தகருப்பன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தியாகராஜபுரம், மூக்கனூர், கடுவனூர், மஞ்சபுத்தூர், செம்பராம்பட்டு, மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.