பதிவு செய்த நாள்
15
ஜூலை
2015
12:07
கும்பகோணம்: கும்பகோணம் ராம ஸ்வாமி கோவிலில், எட்டு லட்சம் மதிப்பிலான கொடிமரம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. கும்பகோணம் ராமசுவாமி கோவில், மகாமகம் தொடர்புடையை வைணவ கோவில்களில் ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால், 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கோவிலில், பட்டாபிஷேக கோலத்தில் ராமரும் சீதையும் உள்ளனர். ராம சரணம் அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை நிதியுதவியுடன் இக்கோவிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட விமானங் களையும் திருப்பணி செய்வதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர், 13ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரம், 90 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், அவை அடிபாக த்தில் உடைந்து போய் காணப்பட்டது. இதை அகற்றிவிட்டு, புதிய கொடிமரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது திருக்குடந்தை சீதாராமபக்த ஜனசபாவினர் கொடிமரத்தை உபயமாக வழங்க முன்வந்தனர். கடந்த மூன்று மாதங்களாக, தேக்கு மரத்தினாலான கொடிமரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, பூஜைகள் நடத்தி, பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில், செப்பு மற்றும் தங்கமுலாம் பூசப்பட உள்ளது. கொடிமரம் பிரதிஷ் டை நிகழ்ச்சியில் கோவில் பட்டாச் சாரியர்கள், திருக்குடந்தை சீதாராம பக்தஜனசபாவினர் கலந்து கொண்டனர்.