Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஜெகநாத் ரத யாத்திரைக்கு விரிவான ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்போற்சவம்! திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
05:07

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்புவாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆணி மாத அம்மாவாசையான இன்று காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருளசெய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1மணிக்கு தண்டபாணி குருக்கள் யா கத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். அம்மாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆடி மாத அம்மாவாசையான ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி அன்று நிகும்பலா யாகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar