ஜெகநாத் ரத யாத்திரைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2015 02:07
ஆமதாபாத்: ஜூலை 18 ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்க இருக்கும் 139 வது ஜெகநாத் ரத யாத்திரைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி விகாஷ் சாகே தெரிவித்தார். ஆமதாபாத் நகரில் 18 கி.மீ., தூரத்திற்கு நடக்க இருக்கும் இந்த யாத்திரையில் 20,000 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு அமர்ததப்படுவார்கள் என தெரிவித்தார். ஜெகநாத் ரத யாத்திரையில் 18க்கும் மேற்பட்ட யானைகளும், 100க்கும் மேற்பட்ட லாரிகளும் பங்கெடுக்க இருப்பதாக தெரிகிறது.