ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் சார்பில் உலக நன்மைகள் வேண்டி, ஓராண்டிற்கு தொடர்ந்து நடைபெறும் ஸ்ரீவிஷ்வசாந்தி மஹாயாகம் துவங்கியது. உலக நன்மைகள், மழைவளம், வியாபார வளர்ச்சி மற்றும் பல நன்மைகள் வேண்டி நடக்கும் இந்த யாகத்தை, ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜர் ஜீயர்சுவாமிகள் துவக்கி வைத்தார். இன்று முதல் தினமும் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஓராண்டிற்கு தினமும் நடக்கிறது. இதில் தக்கார் ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ், கிச்சப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.