பதிவு செய்த நாள்
17
ஜூலை
2015 
11:07
 
 பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.இன்று மாலை 5:45 மணிக்கு, கன்யா பூஜை, 7:45க்கு, தீபாராதனை நடக்கின்றன. பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது. தொடர்ந்து, ஆக., 8ம் தேதி மாலை 5:45க்கு, முருகன், வள்ளி, தெய்வானைக்கு பாலாபிேஷகம், 7:45க்கு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.ஆக., 16ம் தேதி காலை 7:30க்கு, திருவாடிப்பூரத்துக்கு தீர்த்தவாரி, அம்மனுக்கு அம்பராம்பாளையம் ஆற்றில் ஆறாட்டு உற்சவம், காலை 9:30க்கு, தீபாராதனை, பிரசாதம், தீர்த்தம் கொண்டு வருதல், 11:00க்கு, கோவிலில் அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம், மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, 5:45க்கு, வளையல் காப்பணிவித்தல், வளையல் திருவிழா நடக்கின்றன.ஆக., 18ம் தேதி காலை 11:00க்கு, நாகசதுர்த்தி, 12:00க்கு, தீபாராதனை உட்பட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.