விழுப்புரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2015 12:07
விழுப்புரம்: விழுப்புரம் மேல்தெரு செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு பூங்கரகம் வீதியுலாவும், காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. . தொடர்ந்து, காலை 10 மணிக்கு சக்தி பூங்கரகம் வீதியுலாவும், பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. சாகை வார்த்தல் நிகழ்ச்சியை நகர்மன்ற 5வது வார்டு கவுன்சிலர் செந்தில் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். விழாக்குழு தலைவர் மோகன், உறுப்பி னர்கள் கருணாகரன், பால்ராஜ், சுந்தர்ராஜ், ராஜேந்திரன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.