வல்லபி மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவ தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2015 10:07
சிதம்பரம்: சிதம்பரம் வல்லபி மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவத்தையொட்டி அம்மன் தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் சுப்ரமணிய படைய õச்சித் தெரு வல்லபி மாரியம்மன் கோவிலில் 67வது ஆடி தீமிதி மகோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி வல்லபி மாரியம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சிறப்பு வழிப்பாடுகள் நடந்தது. மாலை அம்மன் புறப்பாடும், இரவு தீத்தாம்பாளையம் தட்சிணாமூர்த்தி பம்பை குழுவினரின் காத்தவராயன் கதை சொல்லும் சொற்பொழிவு நடக்கிறது. தீமிதி 10ம் நாள் உற்சவமான வல்லபி மாரியம்மன் தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி மாரியம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் புறப்பாடு செய்து காலை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வல்லபி மாரியம்மன் தேர் நான்கு வீதிகள் உள்ளிட்ட முக்கியத் தெருக்கள் வழியாக சென்று மதியம் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று காலை பக்தர்கள் வல்லபி மாரியம்மனுக்கு காவடி எடுத்து வேண்டுதல் பி ரார்த்தனை செய்கின்றனர். மாலை தீச்சட்டி எடுத்து தீமிதி <உற்சவம் நடக்கிறது.