Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » கூர்ம அவதாரம்
அம்ருத மதனம் (கூர்ம அவதாரம்)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
15:48

1. துர்வாஸா: ஸுர வநிதாப்த திவ்யமால்யம்
சக்ராய ஸ்வயம் உபதாய தத்ர பூய;
நாகேந்த்ர ப்ரதிம்ருதிதே சசாப சக்ரம்
கா க்ஷாந்தி: த்வதிதர தேவதாம்ச ஜாநாம்

பொருள்: குருவாயூரப்பனே! ஒரு சமயம் துர்வாச முனிவருக்கு தேவலோகப் பெண்ணான ஓர் அப்சரஸ் மூலமாக அம்பாளின் மாலை ஒன்று கிடைத்தது. அதனை அவர் தானாகவே இந்திரனிடம் கொடுத்தார். (அந்த மாலையை அவன் தனது யானையிடம் தந்தான்) அந்த மாலை இந்திரனின் யானையால் மிதிக்கப்பட்டது. அதனைக் கண்ட துர்வாசர் இந்திரனைச் சபித்தார். துர்வாசர் உன்னுடைய அம்சமாகப் பிறக்காமல் மற்ற தெய்வத்தின் அம்சமாகப் (சிவனின் அம்சமாக) பிறந்ததால் அவருக்குப் பொறுமை எப்படி இருக்கும்?

2. சாபேன ப்ரதித ஜரேத நிர்ஜரேந்த்ரே
தேவேஷ்வயி அஸுரஜிதேஷு நிஷ்ப்ரபேஷு
சர்வாத்யா: கமலஜம் ஏத்ய ஸர்வ தேவா
நிர்வாண ப்ரபவ ஸமம் பவந்தம் ஆபு;

பொருள்: மோட்சத்தை அளிப்பவனே! (நிர்வாணப்ரபவ) குருவாயூரப்பனே! துர்வாசரின் சாபம் காரணமாக தேவர்களின் அதிபதியான இந்திரன் தனது சக்தி குறைந்தவனாகவும், மூப்பு அடைந்தவனாகவும் மாறினான். தேவர்கள் அனைவரும் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு, ஒளி இழந்தனர். சிவன் முதலான அனைவரும் தாமரையில் இருந்து தோன்றிய ப்ரும்மாவைக் கண்டபின், அவனுடன் இணைந்து உன்னைக் காண வந்தனர் அல்லவா?

3. ப்ரஹ்மாத்யை ஸதுதமஹிமா சிரம் ததாநீம்
ப்ராதுஷ்யன் வரத புர: பரேண தாம்னா
ஹே தேவா திதிஜ குலை: விதாய ஸந்த்திம்
பியூஷம் பரிமதத இதி பர்யசாஸ்த்வம்

பொருள்: வரம் அளிப்பவனே! குருவாயூரப்பனே! ப்ரும்மா முதலான தேவர்கள் உன்னைக் குறித்த ஸ்தோத்ரங்களை பல காலம் சொல்லி வந்தபோது பெருமை கொண்ட நீ அப்போது அங்கு தோன்றினாய், தேவர்களிடம், தேவர்களே! அசுரர் கூட்டத்தையும் உங்களுடன் இணைத்துக் கொண்டு, திருப்பாற்கடலைக் கடையுங்கள் என்றாய் அல்லவா?

4. ஸந்தானம் க்ருதவதி தானவை: ஸுரௌகே
மந்தாநம் நயதி மதேன மந்தராத்ரிம்
ப்ரஷ்டே அஸ்மின் பதரமிவ உத்வஹன் ககேந்த்ர
ஸத்ய: த்வம் விநிஹிதவான் பய: பயாதௌ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் சமாதானம் செய்து கொண்டனர். அந்த கர்வத்துடன், கடைவதற்கு உரிய மத்தாகிய மந்த்ரமலையைத் தூக்கி வரும்போது, பாரம் தாங்காமல் கீழே நழுவ விட்டனர். உடனே நீ உனது கருடன் மீது அமர்ந்து கொண்டு அந்த மலையை ஓர் இலந்தைக் கொட்டை போன்று எளிதாகக் கொண்டு வந்து கடலில் வைத்தாய் அல்லவா?

5. ஆதாய த்ருதம் அத வாஸுகிம் வரத்ராம்
பாதோதௌ விநிஹித ஸர்வ பீஜஜாலே
ப்ராரப்தே மதனவிதௌ ஸுராஸுரை: தை;
வ்யாஜாத் த்வம் புஜகமுகே அகரோ: ஸுராரீன்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் விரைவாக வாசுகீ என்ற நாகத்தைக் கயிறாக வைத்து, பலவிதமான மூலிகை விதைகளைப் பாற்கடலில் தூவினர். அதன் பின்னர் தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கினர். அப்போது நீ தந்திரமாக அசுரர்களை வாசுகியின் வாய்ப் பக்கத்தில் நிற்கும்படி செய்தாய்.

6. க்ஷுப்தாத்ரௌ க்ஷுபித ஜலோதர ததாநீம்
துக்தாப்தௌ குருதர பாரத: நிமக்னே
தேவேஷு வ்யதித தமேஷு தத்ப்ரியைஷீ:
ப்ராணைஷீ: கமடதனும் கடோர ப்ருஷ்டாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக சுழன்று கொண்டிருந்த மலையானது, கடைவதால் கலங்கி நிற்கும் நீரை உடைய பாற்கடலில், தனது பாரம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. இதனால் தேவர்கள் மிகவும் மன வருத்தம் கொண்டனர். அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு நீ, கடினமான முதுகை உடைய ஆமையாக உருவம் எடுத்தாய்.

7. வஜ்ராதி ஸ்திரதர கர்ப்பரேண விஷ்ணோ
விஸ்தராத் பரிகத லக்ஷயோ ஜனேன
அம்பாதே: குஹரகதேன வர்ஹ்மணா த்வம்
நிமக்நம் க்ஷிதிதர நாதம் உந்நிநேத

பொருள்: குருவாயூரப்பனே! விஷ்ணுவே! இந்திரனின் வஜ்ராயுதத்தைவிட மிகவும் கடினமான முதுகு ஓட்டைக் கொண்டிருந்தாய். உனது உருவம் லக்ஷம் யோஜனை தூரம் வெகுவாகப் பரந்திருந்தது. இப்படிப்பட்ட உருவம் உடைய நீ கடலின் ஆழம் வரை சென்று அங்கு நீரில் மூழ்கியிருந்த மலையை உனது உடலால் மேலே கொண்டு வந்தாய் அல்லவா?

8. உந்மக்நே ஜடிதி ததா தராதரேந்த்ர
நிர்மேது: த்ருடம் இஹ ஸம்மதேன ஸர்வே
ஆவிச்ய த்விதய கணே அபி ஸர்ப்பராஜே
வைவச்யம் பரிசமயந் அவீவ்ருத: தாத்

பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக உன்னால் மேலே கொண்டு வரப்பட்ட மலை நீரின் மேல் தோன்றியவுடன் அனைவரும் மிகவும் உற்சாகம் கொண்டு மீண்டும் கடலைக் கடையத் தொடங்கினர். அப்போது தேவர்கள், அசுரர்கள் வாசுகியின் நாகம் ஆகியவர்களுக்குள் நீ புகுந்து அவர்கள் சோர்வை நீக்கினாய். மேலும் அவர்களுக்கு சக்தியையும் அளித்தாய்.

9. உத்தாம ப்ரமண ஜவோந்த மத்கிரீந்த்ர
ந்யஸ்தைக ஸ்திரதர ஹஸ்தபங்கஜம் த்வாம்
அப்ராந்தே விதிகிரிசாதய: ப்ரமோதாத்
உத்ப்ராந்தா நுநுவு: உபாத்த புஷ்பவர்ஷா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகவும் வேகமாகக் கடையப்பட்டதால் மந்த்ர மலையானது மேல் நோக்கி எழும்பியது. அதன் மீது (அது மேலே எழும்பாமல்) உனது தாமரை மலர் போன்ற அழகான மென்மையான கரங்களை நீ வைத்தாய். இப்படித் தோன்றும் உன்னைக் கண்டு அதிக மகிழ்வுடன் ஆகாயத்தில் இருந்த ப்ரும்மா, சிவன் போன்றோர் மலர்களைத் தூவினர்.

10. தைத்யௌகே புஜகமுகாநிலேந தப்தே
தேனைவ த்ரிதசகுலேபி கிஞ்சிதார்த்தே
காருண்யாத் தவ கில தேவ வாரிவாஹா:
ப்ராவர்ஷன் அமரகணான் ந தைத்ய ஸங்க்காந்

பொருள்: தேவர்களின் தேவனே! குருவாயூரப்பனே! வாசுகி என்ற நாகத்தின் வாயில் இருந்து தோன்றிய விஷக் காற்றினால் அசுரர் கூட்டம் தடுமாறியது. அப்போது வால்புறம் இருந்த தேவர்களும் சிறிது வேதனை அடைந்தனர். அந்த நேரம் உன்னுடைய கருணையால் தேவர்கள் மீது மழை பொழிந்தது. அந்த மழை அசுரர்கள் மீது பெய்யவில்லை.

11. உத்ப்ராம்யத் பஹு திமி நக்ர சக்ர வாலே
தத்ர அப்தௌ சிரமதிதேபி நிர்வகாரே
ஏக: த்வம் கரயுக க்ருஷ்ட ஸர்ப்பராஜ:
ஸம்ராஜந் பவன புரேச பாஹி ரோகாத்

பொருள்: குருவாயூரில் உள்ளவனே! க்ருஷ்ணா! ஸ்ரீ அப்பனே! கடலில் உள்ள திமிங்கலம், முதலை போன்றவை மிரண்டு ஓடுகின்றபடி வெகு நாட்களாகக் கடலைக் கடைந்த பின்னரும் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை. அதனால் நீ மட்டும் உனது இரு கைகளால் பாம்பை இழுத்துக் கடலைக் கடையத் தொடங்கினாய். என்னை வ்யாதிகளில் இருந்து காப்பாற்றுவாய்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.