பதிவு செய்த நாள்
20
ஜூலை
2015
05:07
1. புரா ஹயக்ரீவ மஹாஸுரேண
ஷஷ்டாந்தராந் தோத்யத காண்டகல்பே
நித்ரோன்முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு
வேதேஷுஅதித்ஸ: கில மத்ஸ்ய ரூபம்
பொருள்: குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் ஆறாவது மன்வந்த்ரமான சாக்ஷுஷ மன்வந்த்ரத்தின் போது, அதன் முடிவில் ப்ரளயம் உண்டானது. அந்தப் ப்ரளயத்தின் போது ப்ரும்மா நித்திரையில் இருந்தான். அந்த நேரம் ப்ரும்மாவின் முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்னும் ஓர் அசுரன் தோன்றினான். அவன் வேதங்களை அபகரித்து மறைந்தான். அப்போது நீ மீன் உருவம் எடுத்து அவற்றை மீட்க முடிவு செய்தாய் அல்லவா?
2. ஸதய வ்ரதஸ்ய த்ரமிலாதி பர்த்து:
நதீ ஜலே தர்ப்பயத: ததாநீம்
கராஞ்ஜலௌ ஸஞ்ஜ்வலிதா க்ருதி:
த்வம் அத்ருச்யதா: கச்சந பால மீந:
பொருள்: குருவாயூரப்பா! அதன் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள க்ருதமாலை என்னும் நதியில் தர்ப்பணம் செய்து கொண்டிருந்த ஸத்யவ்ரதன் என்னும் அரசனின் கைகளில் நீ ஒளியுடைய சிறிய மீனாகத் தோன்றினாய் அல்லவா?
3. க்ஷிப்தம் ஜலே த்வதாம் சகிதம் விலோக்ய
நின்யே அம்புபாத்ரேண முனி: ஸ்வகேஹம்
ஸ்வல்பை: அஹோபி: கலசீம் ச கூபம்
வாபீம் ஸரச்ச ஆனசிஷே விபோ த்வம்
பொருள்: குருவாயூரப்பா! (உன்னை அரசன் மீண்டும் நீரில் விட்டான்) உடனே பயந்த உன்னைக் கண்டு அவன் இரக்கம் கொண்டான். உன்னைத் தனது தீர்த்த பாத்திரத்தில் வைத்து தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றான். மாயனே! சில நாட்களில் நீ அந்தப் பாத்திரத்தைவிட பெரிதாகவும், கிணற்றைவிடப் பெரிதாகவும், குளத்தை விடப் பெரிதாகவும், ஏரியைவிடப் பெரிதாகவும் வளர்ந்தாய்.
4. யோகப்ரபாவாத் பவதாக்ஞயைவ
நீத: தத: த்வம் முனினா பயோதிம்
ப்ருஷ்ட: அமுனா கல்பதித்ருக்ஷம் ஏனம்
ஸப்தாஹம் ஆஸ்வ இதி வதம் அயாஸீ:தி
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய உத்தரவுக்கு இணங்க அந்த அரசன் உன்னைக் கடலில் கொண்டு விட்டான். உனது அவதாரத்தைப் புரிந்து கொண்ட அந்த அரசன் ப்ரளயத்தைக் காண விரும்புவதாக உன்னிடம் கூறினான். அவனிடம் நீ பொறுமையாகக் காத்திருக்கும் படி கூறிவிட்டு, கடலில் மறைந்தாய்.
5. ப்ராப்தே த்வதுக்தே அஹநி வாரி தாரா
பரிப்லுதே பூமிதலே முனீந்த்ர:
ஸப்தரிஷிபி: ஸார்த்தம் அபார வாரிணி
உத்கூர்ணமாந: சரணம் யயௌ த்வாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பனே! நீ கூறிய ப்ரளய நாளும் வந்தது. அப்போது பூமி முழுவதும் கனமாகப் பெய்த மழையினால் மூழ்கியது. அந்த நேரம் ஸத்யவ்ரதன் ஸப்தரிஷிகளோடு அந்த நீர்ச்சூழலில் உனது நினைவுடனே சுழன்று உன்னைச் சரணம் அடைந்தான்.
6. தராம் த்வத் ஆதேசகரீம் அவாப்தம்
நௌரூபிணீம் ஆருருஹு ததா தே
தத்கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூய:
த்வம் அம்புதே: ஆவிரபூ மஹுயாந்
பொருள்: குருவாயூரப்பனே! அந்த நேரத்தில் உனது கட்டளைக்கு இணங்க பூதேவி ஒரு படகு போன்ற உருவம் எடுத்து வந்தாள். அதில் அவர்கள் (ஸத்யவ்ரதன் முதலானோர்) ஏறிக் கொண்டனர். அந்தப் படகானது கடுமையான வெள்ளத்தில் ஆடியபோது அவர்கள் பயந்தனர். அப்போது மிகப்பெரிய மீனாக நீ மீண்டும் தோன்றினாய்.
7. ஜஷாக்ருதிம் யோஜன லக்ஷதீர்க்காம்
ததானம் உச்சைஸ்தர தேஜஸம் த்வாம்
நிரீக்ஷ்ய துஷ்டா முநய: த்வதுக்த்யா
த்வத்துங்க ச்ருங்கே தரணிம் பபந்து:
பொருள்: குருவாயூரப்பா! லட்சம் யோஜனை நீளம் உள்ளதாகவும் ஒளிவடிவமாகவே இருந்த உன்னைக் கண்டு முனிவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நீ கூறியதால் உன்னுடைய பெரிய கொம்பில் அந்தப் படகைக் கட்டினார்கள்.
8. ஆக்ருஷ்ட நௌக: முனிமண்டலாய
ப்ரதர்சயன் விச்வ ஜகத்விபாகாந்
ஸம்ஸ்தூயமான: ந்ருவரேண தேன
ஞானம் பரம் ச உபதிசந் அசாரீ:
பொருள்: குருவாயூரப்பனே! நீ அந்தப் படகை இழுத்துச் சென்றாய். அப்படிச் செல்லும்போது உலகத்தின் பல பாகங்களையும் அந்த முனிவர்களுக்குக் காண்பித்தாய். இதனைக் கண்ட ஸத்யவ்ரதன் உன்னைத் துதித்தான். அவனுக்கு ஞானத்தை உபதேசித்துக் கொண்டே நீ சென்றாய்.
9. கல்பாவதௌ ஸப்த முனீன் புரோவத்
ப்ரஸ்தாப்ய ஸத்யவ்ரத பூமிபம்தம்
வைவஸ்வதார்க்யம் மநும் ஆததான:
க்ரோதாத் ஹயக்ரீவம் அபித்ருத: அபூ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரளயம் முடிந்த பின்னர் ஸப்த ரிஷிகளை மீண்டும் அவர்களுக்கு உரிய ஸப்தரிஷி மண்டலத்தில் வைத்தாய். ஸத்ய வ்ரதனை அடுத்த கல்பத்தின் மனுவாகச் (வைவஸ் வதன்) செய்தாய் (இவனுடைய வழித் தோன்றல்களே இராமன் பிறந்த இக்ஷ்வாகு குலமாகும்). பின்னர் மிகுந்த கோபத்துடன் சென்று அசுரன் ஹயக்ரீவனைத் தாக்கினாய்.
10. ஸ்வதுங்க ச்ருங்க க்ஷத வக்ஷஸம் தம்
நிபாத்ய தைத்யம் நிகமாந்த க்ருஹீத்வா
விரிஞ்சயே ப்ரீதஹ்ருதே ததாந:
ப்ரபஞ்ஜ நாகாரபதே ப்ரபாயா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பிரபஞ்சத்தின் காரணமே! உன்னுடைய பெரிய கொம்பு மூலம் அந்த அசுரனை கீழே தள்ளி சிறுவன் அவன் மார்பைப் பிளந்தாய். பின்னர் வேதங்களை மீட்டு ப்ரும்மாவிடம் அளித்து அவனை மகிழச் செய்தாய். என்னைக் காப்பாற்ற வேண்டும்.