செய்துங்கநல்லூர்:கருங்குளம் யூனியன் விட்டிலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வீட்டீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.சுமார் 1547 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணதேவராயர் வம்ச வழியில் வந்த அச்சுதராயர் ஆட்சிக் காலத்தில் தாமிரபரணி ஆற்று தீரத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் மூலவராக விட்டலன் என்றும் உற்சவராக பாண்டுரங்கன் என்றும் பெயர்களை கொண்டு சுவாமி ருக்குமணி, சத்தியபாமா ஆகியோருடன் அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் சுமார் 130 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி வருஷாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை விஸ்வரூப தரிசனம், நித்தியல் திருவாராதனம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கலக ஸ்தாபனம், ஆராதனம், வார்ஷீக மஹோத்ஸவாங்கம், பூர்ணாஹீதி, மூலவர் உத்ஸவர் திருமஞ்சனம், ஈரவாடை கோஷ்டி, அலங்கார திருவாராதனம் ஆகியவை நடந்தது. சாற்றுமுறை தீர்த்தப்ரஸாத கோஷ்டி நடந்தது. மதியம் லட்சார்ச்சனை நடந்தது. மாலை புஷ்பாஞ்சலியும், உற்சவர் ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தது. இதனை முன்னிட்டு இக்கோயிலில் சென்னை வித்யாலஷ்மி குழுவினரின் அபங் பஜனை மற்றும்சென்னை ஷவ்னக் மஹராஜ் அபங் பஜனையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருக்குறுங்குடி திருயோர் மடம் ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளும், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் காவிகயம் கலந்து கொண்டார்.