ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி முளைக்கொட்டு விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2015 12:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மாரியம்மன் கோயில் மேற்கு, கிழக்கு மற்றும் மாயாண்டிபட்டி, கீழபட்டி உட்பட 5 தெருக்களில் ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று முதல் துவங்கியது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள கோயில்களில் முளைப்பாரி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு பெண்கள் கும்மியடிப்பது,அம்மன் போற்றி பாடல்கள் பாடுவது , அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ல் முளைப்பாரி எடுத்து பெரியமாரியம்மன் கோயிலில் ஒன்று கூடி பட்டதரசியம்மன் கோயில் கிணற்றில் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.