விழுப்புரம்: விழுப்புரம் கன்னியம்மன் கோவிலில், 45வது ஆடிப்பெருவிழா மற்றும் தீமிதி விழா நடந்தது. விழுப்புரம் கே.கே.ரோடு, கன்னியாகுளக்கரையில் உள்ள கன்னியம்மன் கோவிலில், 45வது ஆடிப்பெருவிழா மற்றும் தீமிதி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 8ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பந்தல்கால் நடுதல், கணபதி ஹோமம், கொடியேற்றுதல் மற்றும் மகா தீபாரா தனை நடந்தது.அதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி மாலை 4:00 மணிக்கு தீ மிதித்தல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.