புதுச்சேரி: புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை அந்தோணியர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுவைக் கடலூர் உயர்மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் அடிகள் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். நெல்லித்தோப்பு பங்கு அருட்தந்தை குழந்தைசாமி முன்னிலை வகித்தார். வரும் 28ம் தேதி 11.30 மணிக்கு சிறப்பு ஜெய வழிபாடும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் அருள்மரியநாதன் செய்து வருகிறார்.