பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத் தெருவுக்குப் பின்புறம் உள்ள மகாகாளேஸ்வர் அனந்தபத்மநாபர் திருக்கோயிலில், பெருமாள், லட்சுமி, சிவபெருமான் மூவரும் ஒரே சன்னிதியில் அருள்புரிகின்றனர். ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, மகாவிஷ்ணு அங்கு வந்தார். நடுவர் பொறுப்பு அவரிடம் விடப்பட்டது. விளையாட்டில் பார்வதி வென்றாள். ஆனால் சிவனே வென்றதாகப் பொய் கூறிவிட்டார். மகாவிஷ்ணு, அதனால் கோபமுற்ற பார்வதி, தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாப விமோசனமாக பூலோகம் சென்று, காஞ்சி நகரில் அருள்பாலிக்கும் சிவனை பூஜித்தால் சாபம் நீங்கும் என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, இத்தலத்தில் அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனக்கோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்க வடிவில் மகாகாளேஸ்வர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சன்னிதியில் காட்சி தருவது சிறப்பு வாய். நாக்கு, தொண்டை, தொடர்பான நோயுள்ளவர்கள் அனந்த பத்மநாபரை பிரார்த்தனை செய்ய நலம் பெறலாம்.