Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கருப்பர் துதி மாலை! மலையாளக் கருப்பையா
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
கண்டனூர் வய்யக்கரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
15:09

சங்கிலிக் கறுப்பர்

சங்கிலிநற் கறுப்பன் நீ சார்ந்திட்ட பொருளும் நீ
சடாக்ஷர மந்திரமும் நீயே
சகலரும் துதிக்கின்ற தேவாதி தேவன்நீ
சாம்பிராணி வாசகனும் நீயே
எங்கெங்கு அழைத்தாலும் ஏழையின் வாசலில்
எழுந்தோடி வருபவனும் நீயே
இதயத்தில் இருப்போன் நீ இரத்தத்தில் கலப்போன் நீ
இரவு பகல் காப்பவனும் நீயே

குங்குமம் சிறக்கவும் குடியெல்லாம் வாழவும்
குலம் காக்கும் என் தெய்வம் நீயே
குன்றும் நீ குளமும் நீ கோலாகலனும் நீ
குன்றாவளப் பொருளும் நீயே
பங்காளி கூடிட படைப்புகள் கொண்டாடிட
பணியாரப் பிரியனும் நீயே
பதினெட்டுப் படியாளும் பக்தரின் காவலா- நீ
பாதை யெலாம் துணைக்கு வாவா

வாளாட வேலாட வளர் கொண்டை தானாட
வைகையாள் துள்ளியாட
வளர்ந்தோங்கும் புஜமாட வயிரமாம் நகையாட
வளர்ந்திட்ட பயிர்கள் ஆட
காலாட மணியாட கருங்கூந்தல் தானாட
கச்சையெலாம் பின்னி ஆட
கண்ணாடப் பெண்ணாட கயவர்பயந்தாட
கருமீறை முறுக்கி ஆட

கோலாடக் குணமாட குதித்தோடி வருகின்ற
குருதியெல்லாம் ஓடி ஆட
குதிரையின்மேல் வரும் கொள்ளை அழகனை
கும்பிடும் கரங்கள் ஆட
பாலாட மேனியும் பழமாடக்காணியும்
பட்டயக் கொலுசு மாட
பதினெட்டுப் படியாளும் பக்தரின் காவலா - நீ
பாதையெலாம் துணைக்கு வாவா

கார்வளர் வைரவன் கோயில் அமர் முப்பிலிக்
கறுப்பருடன் தன் நகரிலே
கருணை தவழ்சப்பாணி நொண்டி பதினெட்டாய்க்
கருதுபடி நற்கறுப்பும்
சீர்வளர் சின்னக் கறுப்பருடன் ஆட்சிகொள்
தேவே மங்கிலிக்காரியும்
தகழ் அடைக்காத்தாள் மின்னஞ் செட்டி
காளியும் சேரமுன் ஆடல்புரிவாய்

ஏர்வளர்பணியாரம் பாற்சோறு இன்னவை
ஏந்திப்படைத்து நின்றோம்
இன்பருள வைரவன் கோயில் சார்தனவணிகர்
ஈண்டிப்பணிந்து நின்றோம்
பேர்வளர் குலதெய்வம் வைரவனும் நீயுமாய்ப்
பெரிதுகாப்பாற்றி அருளே
பிறங்கு வய்யக்கரை இருந்து வெண்பரிஏறும்
பெரிய கறுப்பண்ணசுவாமி துரையே.

- கவியரசு கண்ணதாசன்

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.