கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சரணம் கருப்பையா! சாமி சரணம் கருப்பையா!வரணும் கருப்பையா! அருள் தரணும் கருப்பையா!பட்டபிளான் நகரத்தார் பாங்காகப் போற்றி வரும்தொட்டியத்து கருப்பையா துணையா நீ வருவாய் (சரணம்)எப்போது அழைத்தாலும் ஏன் என்று ஓடி வரும் - உன்கருணை வெள்ளத்தை என்னவென்று நானுரைப்பேன் (சரணம்)கண்களிலே கருணை வெள்ளம் கையினிலே போர்வாள்தலையினிலே மணிமகுடம் தாள்களிலே நாம் பணிவோம் (சரணம்)தொட்டியனின் சொர்ண அங்கி சொக்கவைக்கும் அழகன்றோமாந்தரெல்லாம் அவள் அருளால் மயங்குகின்றார் இப்போதே (சரணம்)பந்தமற, பாசமற, பாவவினை யாவுமற சொந்தமெனக்கொண்டருளும் தொட்டியா எங்கள் குலதெய்வம் (சரணம்)நொந்தவர்கள் ஓடிவர, சிந்தையெல்லாம் தேடிவரநின்றருளும் எங்கள் குலதெய்வமே தொட்டியா (சரணம்)அன்பெனும் அகலெடுத்து ஆர்வமெனும் நெய் விடுத்தோம்இன்பமெனும் விளக்காவாய் தொட்டியா (சரணம்)சொந்தமென தொட்டியா துணையாக நீ இருக்கசந்ததமும் உன் நினைவால் சங்கடங்கள் தீர்ந்துவிடும் (சரணம்)