கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுத்தவெண் பாற்கடல் தன்னில் துயின்று பின்தொண்டர்கள் கொண்டாடவேதோன்றிய உறங்காப் புளிக்குள்வளர்மாமணித்துளபமணி! சிந்தாமணி!பக்தர்கள் தமக்கினிய நித்தியபரி பூரணம்பவளமணி! என் கண்மணிபாருலகில் மகரமா தம் தன்னில் சுக்கிரபகவானின் வாரமதிலே-சித்தமுத் திருளப்ப பூசாரி மேல்வந்துதிருவிளையாடல் செய்வாய்!சிங்கையப் பதியில்வளர் எங்கள் குல தெய்வமே!ஜெயஜெய கருப்பண்ணனே! (1.)கருப்பனே துணையென் றிருப்பவர் நெஞ்சிலேகாணாத காட்சிதோன்றும்!கருணைசேர் உன்பதியை நோக்கிவரு வார்பிணிகவலைகள் யாவும் தீரும்!மருப்படா மேனியான் உன்பாதம் சேவிக்கவாராத செல்வம் வரும்!வாழ்வுதரும் உன்னுடைய கொலுமுகம் காணவேமனமும்நிம் மதிதான்பெறும்!வெறிப்பான பூதகணம் விலகிவிடும் உன்கோவில்வெண்ணீறு தனை அணிந்தால்!மேலான கல்வியும், ஞானமும் விளங்குமேவேண்டிப் பணிந்துவந்தால்!பிறப்புடன் இறப்பென்னும் தவிப்பகல வேண்டினேன்பிள்ளை உன் துணைவேண்டினேன்பெருகுசிங் கைப்பதியில் உருகிவரும் அடியவர்பெருமான் கருப்பண்ணனே!