பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
04:07
1. கதா அபி ஜந்ம ருக்ஷ திதே தவ ப்ரபோ
நிமந்த்ரித ஜ்ஞாநி வதூ மஹீஸுரா
மஹா அநஸ: த்வாம் ஸவிதே நிதாய ஸா
மஹாநஸ ஆதௌ வவ்ருதே வ்ரஜ ஈச்வரீ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரபோ! ஒரு நாள் உன்னுடைய பிறந்த தினம் வந்தது. அன்றைய தினம் திருஆயப்பாடியின் தலைவியான யசோதை, அதனைக் கொண்டாட, ப்ராமணர்கள், உறவினர்கள் முதலானோரை வீட்டிற்கு அழைத்தாள். உன்னை ஒரு பெரிய கட்டை வண்டியின் அடியில் தொட்டில் கட்டி படுக்க வைத்தாள். பின்னர் தனது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
2. தத: பவத் த்ராண நியுக்த பாலக
ப்ரபீதி ஸங்க்ரந்தந ஸங்குல ஆரவை;
விமிச்ரம் அச்ராவி பவத் ஸமீப:
பரிஸ்புடத் தாரு சடச்சடா ரவ:
பொருள்: குருவாயூரப்பா! அப்போது உன்னைப் பார்த்துக் கொள்ள அருகில் அமர்ந்திருந்த சிறுவர்கள் மிகவும் பலமான சத்தம் எழுப்பினர். அதனுடன் மரங்கள் சடசட என முறிவது போன்ற ஓசையும் மிகவும் பலமாகக் கேட்டது.
3. தத: தத் ஆகர்ணந ஸம்ப்ரம ச்ரம
ப்ரகம்பி வக்ஷோஜ பரா: வ்ரஜ அங்கநா:
பவந்தம் அந்த: தத்ருசு: ஸமந்தத:
விநிஷ்பத் தாருண தாரு மத்யகம்
பொருள்: குருவாயூரப்பனே! அந்த சத்தத்தைக் கோபியர்கள் கேட்டனர். உடனே மிகுந்த அச்சத்துடன் தங்கள் ஸ்தனங்கள் அசைய அங்கு ஓட்டமாக வந்தனர். அங்கு நான்கு பக்கங்களிலும் கட்டைகள் சிதறிக் கிடந்தன. அவற்றின் நடுவில் உன்னைக் கண்டனர்.
4. சிசோ அஹோ கிம்கிம் அபூத் இதி த்ருதம்
ப்ரதாவ்ய நந்த பசுபா: ச பூஸுரா:
பவந்தம் ஆலோக்ய யசோதயா த்ருதம்
ஸமாச்வஸத் அச்ரு ஜல ஆர்தர லோசநா:
பொருள்: குருவாயூரப்பா! அப்போது, ஆ! குழந்தைக்கு என்ன நடந்தது? என்ன நடந்தது என்று பதறியபடி நந்தகோபரும் ப்ராமணர்களும் தங்கள் கண்களில் நீர் வழிய உன்னிடம் ஓடி வந்தனராமே! ஆயினும் நீ யசோதையின் கைகளில் அமைதியுடன் உள்ளதைக் கண்டு நிம்மதி கொண்டனர் அல்லவா?
5. க: க: நு சௌதஸ்குத: ஏஷ: விஸ்மய:
விசங்கடம் யத் சகடம் விபாடிதம்
ந காரணம் கிஞ்சித் இஹ இதி தே ஸ்திதா:
ஸ்வ நாஸிகா தத்த கரா: த்வத் ஈஷகா:
பொருள்: குருவாயூரப்பா! அங்கு உள்ள அனைவரும், இது என்ன? எப்படி நடந்தது? இத்தனை பெரிய வண்டி எவ்வாறு உடைந்தது? எந்தக் காரணமும் தெரியவில்லையே என்று மூக்கில் விரலை வைத்து வியப்புற்றனர். உன்னையே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
6. குமாரகஸ்ய அஸ்ய பயோதர அர்த்திந:
ப்ரோதநே லோல பத அம்புஜ ஆஹதம்
மயா மயா த்ருஷ்டம் அந: விபர்யகாத்
இதி ஈச தே பாலக பாலக: ஜகு:
பொருள்: ஈசனே, குருவாயூரப்பனே! அப்போது உன்னருகில் இருந்த சிறுவர்கள் அவர்களிடம் - பால் வேண்டும் என்பதுபோல் இந்தக் குழந்தை அழுதது, தனது தாமரை போன்ற அழகிய கால்களால் இந்த வண்டியை உதைத்தது. இதனால் வண்டி கீழே விழுந்தது. இப்படியே நாங்கள் கண்டோம் - என்று கூறினர்.
7. பியா ததா கிஞ்சித ஜானதாம் இதம்
குமாரகாணாம் அதி துர்கடம் வச:
பவத் ப்ரபாவ கவிதுரை: இதி ஈரிதம்
மநாக் இவ ஆசங்க்யத த்ருஷ்ட பூதனை:
பொருள்: குருவாயூரப்பா! சிறுவர்கள் கூறியதைக் கேட்ட கோபியர்கள். இந்தச் சிறுவர்கள் பயத்தால் பிதற்றுகின்றனர். இது பொருத்தமாக இல்லை என்றனர். அவர்களுக்கு உனது மகிமை புரியவில்லை. என்றாலும் நீ பூதனையைக் கொன்ற காட்சியைப் பார்த்த சிலர் அப்படி நடந்திருக்கலாமோ என்ற ஐயம் கொண்டனர்.
8. ப்ரவால தாம்ரம் கிம் இதம் பதம் சக்ஷதம்
ஸரோஜா ரம்யௌ நு கரௌ விராஜிதௌ
இதி ப்ரஸர்பத் கருணா தரங்கிதா:
த்வத் அங்கம் ஆபஸ்ப்ருசு: அங்கநா ஜநா:
பொருள்: குருவாயூரப்பா! ஆய்ச்சி பெண்கள், பவழம் போன்று சிவந்து அழகாக உள்ள இந்தப் பிஞ்சுக் கால்களில் ஏதேனும் காயம் உள்ளதா? என்று கூறினர். அப்படிக் கூறிக்கொண்டு, உனது திருமேனியை மெதுவாகத் தொட்டனர். பின்னர், இந்தப் பிஞ்சுக் கைகளுக்கு ஏதேனும் நேர்ந்ததா? என்றனர் அல்லவா?
9. அயே ஸுதம் தேஹி ஜகத் பதே: க்ருபா
தரங்க பாதாத் பரிபாதம் அத்ய மே
இதி ஸ்ம ஸங்க்ருஹ்ய பிதா த்வத் அங்ககம்
முஹு: முஹு: ச்லிஷ்யதி ஜாத கண்டக:
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய தந்தை, யசோதை! உலகையே காத்து நிற்கும் ஹரி நமது குழந்தையைக் காப்பாற்றினான். என்னிடம் அந்தக் குழந்தையைக் கொடு என்று உன்னைத் தூக்கிக் கொண்டான். உன்னை மார்போடு அணைத்து, உனது சிறிய அழகான திருமேனியை ஆசையுடன் மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டு தழுதழுத்தார்.
10. அந; நிலீன: கில ஹந்தும் ஆகத:
ஸுர: அரி: ஏவம் பவதா விஹிம்ஸித:
ரஜ: அபி நோ த்ருஷ்டம் அமுஷ்யதத் கதம்
ஸ: சுத்த ஸத்வே த்வயி லீநாவந் த்ருவம்
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக வண்டியின் உருவத்தில் வந்தவனும், தேவர்களின் எதிரியுமான அசுரன் உன்னைக் கொல்ல வந்தான். அவனை நீ கொன்றாய். ஆயினும் அவனது உடல் பகுதிகள் கூட அங்கு இல்லை. அவன் முழுவதுமாக உன்னிடம் சேர்ந்தான் அல்லவா?
11. ப்ரபுஜிதை: தத்ர தத: த்வி ஜாதி பி:
விசேஷத: ஸம்பித மங்கள ஆசிஷ:
வ்ரஜம் நிஜை பால்யரஸை: விமோஹயந்
மருத்புர அதீச: ருஜாம் ஜஹீஹி மே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பின்னர் அங்கு இருந்த பிராமணர்களால் நீ நன்றாக ஆசீர்வதிக்கப் பட்டாய். இப்படியாக உனது சிறிய வயதிற்கு உரிய லீலைகளால் கோகுலத்தை மகிழச் செய்தாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.