Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » யசோதைக்கு விஸ்வரூபம்
யசோதைக்கு விஸ்வரூபம்!
எழுத்தின் அளவு:
யசோதைக்கு விஸ்வரூபம்!

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
17:02

1. அயிதேவ புரா கில த்வயி ஸ்வயம்
உத்தான சயே ஸ்தநந்தயே
பரி ஜ்ரும்பணதோ வ்யபாவ்ருதே
வதநே விச்வம் அசஷ்ட வல்லவீ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவனே! ஒரு நாள் நீ உனது தாயின் ஸ்தனங்களில் இருந்து பாலைக் குடித்துவிட்டு, மல்லாந்து படுத்திருந்தாய். அப்போது நீ கொட்டாவி விட்டாய். உன்னுடைய வாய்க்குள் இந்த உலகம் முழுவதையும் யசோதை பார்த்தாள் அல்லவா?

2. புந: அபி அத பாலகை: ஸமம் த்வயி
லீலா நிரதே ஜகத் பதே
பல ஸஞ்சய வஞ்சந க்ருதா தவ மீருத்
போஜநம் ஊசு: அர்பகா:

பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகின் பதியே! ஒரு நாள் உனது தோழர்களுடன் நீ விளையாடிக் கொண்டிருந்தாய். அந்த நேரம் அவர்கள் வைத்திருந்த பழங்களை, அவர்கள் அறியாமல் உண்டாய். இதனால் கோபம் கொண்ட அவர்கள் நீ மண்ணைத் தின்று விட்டதாக உனது தாயிடம் பொய் கூறினார்கள் அல்லவா?

3. அயி தே ப்ரளய அவதௌ விபோ
க்ஷிதி தோய ஆதி ஸமஸ்த பக்ஷிண:
ம்ருது பாசநத: ருஜா பவேத்
இதி பீதா ஜநநீ சுகோப ஸா

பொருள்: ப்ரளயத்தின் போது அனைத்தையும், உண்டு விழுங்குபவனே! குருவாயூரப்பா! மண்ணைத் தின்றதால் உனக்கு நோய் ஏற்படுமோ என்று யசோதை பயந்து உன்னைக் கோபித்தாள் அல்லவா?

4. அயி துர்விநய ஆத்மக த்வயா கிமு
ம்ருத்ஸா பத வத்ஸ பக்ஷிதா
இதி மாத்ரு கிரம் சிரம் விபோ விததாம் த்வம்
ப்ரதிஜஞ்நிஷே ஹஸந்

பொருள்: எங்கும் நிறைந்தவனே! குருவாயூரப்பா! உனது தாய் உன்னிடம் பொல்லாத பையனே! மண்ணைத் தின்றாயா? என்று கேட்டாள். ஆனால் அதற்கு நீ நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே நின்றாய். பின்னர் இல்லை, நான் தின்னவில்லை, அது பொய் என்றாய்.

5. அயி தே ஸகலை: விநிச்சிதே விமதி:
சேத் வதநம் விதார்யதாம்
இதி மாத்ரு விபத்ர்ஸித முகம் விகஸத்
பத்மநிபம் வ்யதாரய:

பொருள்: குருவாயூரப்பா! உடனே உனது தாய், நீ மண்ணைத் தின்றதாக அனைவரும் கூறுகின்றனர். நீ மட்டுமே இல்லை என்று சொல்கிறாய். அப்படி யென்றால் உனது வாயைத் திறந்து காட்டு என்றாள். நீயும் தாமரை மலர் போன்ற அழகாக சிவந்து உள்ள உனது வாயைத் திறந்தாய் அல்லவா?

6. அபி ம்ருத் லவ தர்சந உத்ஸுகாம்
ஜநநீம் தாம் பஹு தர்பயந் இவ
ப்ருதிவீம் நிகிலாம் ந கேவலம் புவநாநி
அபி அகிலாநி அதீத்ருச:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது வாயில் கொஞ்சம் மண் இருக்கும் என்று உனது தாய் நினைத்தாள். ஆனால் அவளது எதிர்பார்ப்பை நீ முற்றிலுமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினாய். எனவே பூமியை மட்டும் அல்லாமல் அனைத்து உலகங்களையும் உனது வாயில் தெரியும்படி செய்தாயாமே?

7. குஹசித் வநம் அம்புதி: க்வசித் அப்ரம்
குஹசித் ரஸாதலம்
மநுஜா: தநுஜா: க்வசித் ஸுரா: தத்ருசே
கிம் ந ததா த்வத் ஆநநே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது வாய்க்குள் ஒரு பக்கமாக காடுகளையும் கடலையும் கண்டாள்; ஓர் இடத்தில் ஆகாயம் கண்டாள்; மேலும் பாதாள உலகங்களையும், மனிதர்களையும், தேவர்களையும், அசுரர்களையும் கண்டாள். அந்த வாய்க்குள் இல்லாதது என்று எதுவுமே இல்லை.

8. கலச அம்புதி சாயிநம் புந: பர வைகுண்ட
பத அதிவாஸிநம்
ஸ்வ புர: ச நிஜ அர்பக ஆத்மகம் கதிதா
த்வாம் ந ததர்ச ஸாமுகே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மேலும் அவள் நீ பாற்கடலில் பள்ளி கொண்டவனாக உள்ளத்தைக் கண்டாள்; பரமபதமான வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்; தன்னுடைய குழந்தையாகத் தென்படுவதையும் கண்டாள். இப்படியாக உன்னைப் பலவிதமாகக் கண்டாள் அல்லவா?

9. விகஸத் புவநே மக உதரே நநு பூவ
அபி ததாவித ஆநந:
அநயா ஸ்புடம் ஈக்ஷித: பவாந் அநவஸ்தாம்
ஜகதாம் பத ஆதநோத்

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக உனது வாய்க்குள் அனைத்து உலகங்களையும் கண்டாள். அவை அனைத்தும் உனது முகத்தில் ப்ரகாசமாக இருந்தன. மேலும் உனது வாய்க்குள் மீண்டும் நீ நிற்பதாகவும் அந்த வாய் திறந்தும், அதற்குள் மீண்டும் நீ நிற்பதும் போன்றும், இப்படித் தொடர்ச்சியாக நீ தெரிந்தாய். நீ முடிவற்றவன் என்று உணர்த்தினாய் போலும்.

10. த்ருத தத்வ தியம் ததர க்ஷணம் ஜநநீம்
தாம் ப்ரணயேந மோஹயந்
ஸ்தநம் அம்பதி-இதி உபாஸஜந் பகவந்
அத்புத பால பாஹிமாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக உனது தாய் நல்ல ஞானம் அடைந்தாள். சற்று நேரம் அதே மயக்க நிலையில் இருந்த அவளை, நீ மீண்டும் தெளிய வைத்தாய். அதன் பின்னர் அம்மா! பசிக்கிறது! பால் தருகிறாயா? என்று எதுவும் அறியாதவன் போல் அவள் மடியில் அமர்ந்தாய். அற்புதமான குழந்தையே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar