தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த புதுபல்லகச்சேரியில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சக்தி கரக வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. நேற்று மதியம் 1 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா சிலைகளை வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு அருணாச்சலம், துணைத்தலைவர் ஆறுமுகம், தர்மகர்த்தா முருகன், பூசாரி சக்கரவர்த்தி, தே.மு.தி.க., ஒன்றிய செயலா ளர் ஜெய்சங்கர், கொளஞ்சி, சங்கர், குமரவேல், சபரிமலை உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.