பாகனேரி : பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம் நேற்று நடந்தது. கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். எட்டாம் நாளான நேற்று முன்தினம் சாமுண்டீஸ்வரி புறப்பாடு நடந்தது. அன்று மாலை 6.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அன்றைய தினம் நல்ல மழை பெய்ததால், தேர் கீழரத வீதிக்கு வந்த போது, சகதியில் சிக்கியது. தேரை மீட்கும் முயற்சியில் இரவு 1 மணி வரை பக்தர்கள் ஈடுபட்டும் முடியவில்லை. இதனால், நேற்று காலை 9.45 மணிக்கு பொக்லைன் இயந்திரம், டிராக்டர் உதவியுடன் இழுக்க துவங்கினர். பின் காலை 10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. முயல்வேட்டையுடன் விழா நிறைவு பெற்றது.