பதிவு செய்த நாள்
25
ஜூலை
2015
12:07
ராமன், சீதையை தேடி இலங்கை சென்ற இடங்களை கண்டு களிக்கும் வகையில், ராமாயணா யாத்ரா என்ற விமான சுற்றுலாவுக்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:ஆக., 8ல், சென்னையில் புறப்பட்டு, இலங்கையில் உள்ள நுவுரா இலியா, கண்டி, கொழும்பு ஆகிய நகரங்களுக்கு செல்ல, விமான சுற்றுலாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அப்போது, சீதா ராமன் கோவில், காயத்ரி பீடம், பக்த அனுமான் கோவில் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லலாம். கட்டணம், 34 ஆயிரம் ரூபாய். ஆக., 14ல், விமானத்தில் புறப்பட்டு, தாய்லாந்தில் உள்ள பட்டையா, பாங்காக் ஆகிய நகரங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சரணாலயம், புத்தர் கோவில்கள், அரண்மனை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். கட்டணம், 37 ஆயிரத்து 500 ரூபாய். இரண்டு சுற்றுலாவும், நான்கு இரவு, ஐந்து பகல் என, அமைகிறது. கூடுதல் தகவல்களுக்கு, 90031 40681/682 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.