சிதம்பரம்: விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் உழவாரப் பணிகள் நடந்தது. சிதம்பரம் மந்தக்கரை காமாட்சியம்மன் கோவிலில் தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்றச் சங்கம் சார்பில் உழவாரப் பணிகள் நேற்று நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் மண்டிக்கிடந்த புல் செடி புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பூஜைக்குறிய பூச் செடிகள் வைக்கும் பணி நடந்தது. மேலும் கோவில் சன்னதி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விஸ்வகார்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவிலில் காமாட்சியம்மனுக்கு சி றப்பு பூஜைகள், வழிப்பாடுகள் நடந்தது.