திண்டிவனம்: ஆடி மாதத்தை முன்னிட்டு, அம்மச்சார் அம்மன் கோவிலில், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. திண்டிவனம் காவேரிப்பாக்கத்திலுள்ள அம்மச்சார் அம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து நேற்று மஞ்சள் நீ ராட்டு விழா நடந்தது. இதையொட்டி, காலை 7:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.