Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூக்கம் வராத சமயத்தில் படுத்தபடி ... லலிதா சகஸ்ரநாமம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபம் நமது எதிரி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
12:07

சிலசமயங்களில், நம்மால் நன்மை பெற்றவர்கூட நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக் கூடும். அப்படிப்பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது.அல்லாஹ் மீது அபார பக்தி கொண்டவர் அப்துல்லா.ஒருநாள்  பிச்சைக்காரர் ஒருவர்,  ஐயா! பசிக்கிறது என்றார்.  அப்துல்லா, அவரை உள்ளே அழைத்து உணவு பரிமாறினார்.பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார்.அப்துல்லா அவரிடம், பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட  வேண்டும், என்றார்.வந்தவர், ஐயா! இந்த உணவை அளித்தது நீர். கடவுள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்? என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று பலமுறை சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, நீர் ஆண்டவரை பார்த்திருக்கிறீரா? என்று வேறு கேட்டு விட்டார்.அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது.  பெரியவரின் கையைப் பிடித்து, இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமையில்லாதவர், என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய் விட்டார்.அன்றிரவு இறைவன் அப்துல்லாவின் கனவில், அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில்  பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே, என்றார்.அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை எண்ணி வியந்தார்.இப்போது புரிந்து கொண்டீர்களா! தன்னை வெறுப்பவர்களுக்கும் இறைவன் இரக்கம் காட்டுகிறான். அவனே அப்படி இருக்கும் போது நாம் எம்மாத்திரம். எனவே எந்தச் சூழ்நிலையிலும் கோபப்படாதீர்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar