திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டரில் உள்ள சிவசைலம் அத்ரி மலைக்கோயிலில் அத்ரிபரமேஸ்வரர் அருளுகிறார். இவ்வாலய ருத்ர விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் நீண்டு உயர்ந்த அம்ருதவர்ஷிணி மரம் உள்ளது. இம்மரம் சித்திரை மாதம் முழுதும் எல்லா கிளைகளில் இருந்தும் பன்னீர் துளிபோல் நீர் விழும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும். இவ்வாலயத்தில் மேற்கு நோக்கி ஆரத்தி காட்டுவார்கள்.