பொள்ளாச்சி : ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், 16 வகை தீர்த்தாபிஷேக பூஜை நடக்கிறது. ஆடிவெள்ளியை முன்னிட்டு, பொள்ளாச்சி பி.கே.எஸ்., காலனி போயர் சமூகத்தவரின் 11 ஆண்டு தீர்த்த பூஜை நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு சேத்துமடை காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது.அன்று காலை 10.00 மணிக்கு பி.கே.எஸ்.காலனி முத்துவிநாயகர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தீர்த்த ஊர்வலம் மாகாளியம்மன் கோவிலை வந்தடைகிறது.பகல் 12.00 மணிக்கு அம்மனுக்கு 16 வகை அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆடிவெள்ளி தீர்த்தக்குழு மேற்கொண்டுள்ளது.