உளுந்துார்பேட்டை:புகைப்பட்டி, முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.முன்னதாக, கடந்த 21ம் தேதி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 28ம் தேதி காலை, சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கூழ் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு படையிட்டு வழிபட்டனர். நேற்று முன்தினம், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைந்தது.