இடையாறு மாரியம்மன் கோவிலில் ரூ.2.58 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2011 11:07
ப.வேலூர்: நன்செய் இடையாறு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 662 ரூபாய் ரொக்கம், ஏழு பவுன் தங்கம், 55 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ப.வேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் உண்டியல், உதவி கமிஷனர் ஜோதி முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டது.உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை தொகை, ஆபரணங்கள் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.அதில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 662 ரூபாய் ரொக்கம், 7 பவுன் தங்கமும், 55 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது கணக்கிடப்பட்டது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன், கோவில் உண்டியல் திறந்து கணக்கிடப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியின் போது, பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார் ஆகிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.