ஓசூர்: தேன்கனிக்கோட்டை, வீரபத்திரசாமி கோவிலை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தேர்÷ பட்டையில் பழமை வாய்ந்த வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றிலும் முட்புதர்களும், முட்செடிகளும் அதிகளவில் வளர்ந் துள்ளது. இதை விஸ்வஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.