* கார்த்திகை பெண்களின் கண்மணியான கார்த்திகேயரே! மாயோனின் மருமகனே! சஷ்டி விரத நாயகரே! பன்னிருகை பெருமானே! அருணகிரியை காத்தவரே! சேவல் கொடி தாங்கியவரே! நக்கீரர் மனம் கவர்ந்தவரே! நல்லோர் நெஞ்சில் வாழ்பவரே! அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்தவரே! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே! வயலுõர் நாயகரே! குமரகோட்டத்தில் அருள்பவரே! எங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தந்தருள்வீராக.
* கருணாமூர்த்தியே! அழகு தெய்வமே! பார்வதி பாலகரே! சரணடைந்தவரைக் காப்பவரே! ஆவினன்குடி வாழ்பவரே! கந்தப் பெருமானே! தேவசேனாபதியே! மருதமலை ஆண்டவரே! வெண்ணீறு அணிந்தவரே! குமரக் கடவுளே! சிந்தனைக்கு இனியவரே! என்றும் இளையவரே! ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்தவரே! வேதம் போற்றும் வித்தகரே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதரே! உமது அருளால் உலக உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழ வேண்டுகிறேன்.