பதிவு செய்த நாள்
07
ஆக
2015
12:08
பொன்னேரி:பொன்னியம்மன் கோவிலில், மூன்று நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா, இன்று துவங்குகிறது.பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள, பொன்னியம்மன் கோவிலில், ஆடித்திருவிழா, இன்று துவங்கி, 9ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையடுத்து, இன்று காலை, 7:00 மணிக்கு புறப்படும் கரகம், திருவேங்கிடபுரம், உப்பரபாளையம் பகுதிகளில் வலம் வருகிறது.ஆக., 8ம் தேதி (நாளை) பொன்னியம்மன் நகர், சாய் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் வலம் வரும்.ஆக., 9ம் தேதி (நாளை மறுநாள்) காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணிக்கு, வாடை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.