Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்க கருப்பன், தங்க கருப்பன் கோட்டைக் கருப்பர் காப்பு
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
கருப்பர் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
02:08

(வேல் வேல் முருகா வேலய்யா மெட்டு)

கருப்பா கருப்பா கருப்பய்யா
கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா
கருப்பா கருப்பா கருப்பய்யா
கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா     (கருப்பா....)

கருப்பா உன்னை அழைக்கின்றேன்
காவியம் பாடித் துதிக்கின்றேன்
கண்ணின் மணியை அழைக்கின்றேன்
காலமும் உன்னைத் துதிக்கின்றேன்    (கருப்பா....)

கோட்டைக் கருப்பரை அழைக்கின்றேன்
கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்
வேட்டை செல்கையில் அழைக்கின்றேன்
வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்.    (கருப்பா....)

சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்
சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்
சந்ததி தழைக்க அழைக்கின்றேன்
சரணம் பாடித் துதிக்கின்றேன்        (கருப்பா....)

காளியம்மனை அழைக்கின்றேன்
கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்
கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்
கவலைகள் தீர்த்திட துதிக்கின்றேன்    (கருப்பா.....)

சின்னக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறுமைகள் தீர துதிக்கின்றேன்
சிங்காரக் கருப்பரை அழைக்கின்றேன்
சிறப்புகளைத் தர துதிக்கின்றேன்        (கருப்பா....)

முத்துக் கருப்பரை அழைக்கின்றேன்
முத்தமிழ் பாடி துதிக்கின்றேன்
முப்பிலி கொடுத்து அழைக்கின்றேன்
முறையாய் உன்னைத் துதிக்கின்றேன்    (கருப்பா....)

அன்பால் உன்னை அழைக்கின்றேன்
அமைதியைத் தந்திட துதிக்கின்றேன்
மனதால் உன்னை அழைக்கின்றேன்
மங்களங்கள் தர துதிக்கின்றேன்        (கருப்பா....)

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar