Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோட்டூர் மகாகாளர் கருப்பர் அழைப்பு
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
எங்க கருப்பன், தங்க கருப்பன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
14:41

எங்க கருப்பனே
எங்க கருப்பனே - எங்களையும் வாழவைக்கும்
தங்கப் கருப்பனே
தங்கக் கருப்பனே!

குங்குமம் காக்கவந்த
குலதெய்வப் பேரழகே
மங்களமே பொங்கவேணும் - நீ
மாசெல்லாம் துடைக்க வேணும்!

தொட்டபணி சிறக்க வேணும்
துணைக்குநீயும் வரவேணும்
கொட்டுகின்ற மழையாகி
குதிரெல்லாம் நிறையவேணும்!

இனச்சண்டை பணச்சண்டை
ஏமாற்று சூதெல்லாம்
கணத்தில் ஒழித்திடவே
கலகலப்பாய் ஓடிவாய்யா!

அந்திசந்தி நேரத்திலே
ஆபத்து நேரயிலே
வந்திங்கே காருமய்யா
வாட்டத்தைத் தீருமய்யா!

பில்லி சூனியத்தை
பேயான நோய்களையும்
கிள்ளி எறிந்திடவே
குலவையிட்டோம் வாருமய்யா!

முறுக்குமீசை எங்கே
முட்செருப்பு காலுமெங்கே
அறுக்கின்ற வாளெங்கே
அட்டகாசச் சிரிப்பெங்கே!

ஜல்ஜல் ஓசையெங்கே
ஜவ்வாது மணமெங்கே
வில்வெட்டு சட்டையெங்கே
வீசிடும் சாட்டையெங்கே!

சுக்குமாந் தடியெங்கே
தோற்கடிக்கும் தோளெங்கே
திக்கெல்லாம் புகழ்கூட்டும்
திடமான நடையெங்கே!

ரோஜாவின் மாலைஎங்கே
நோய்தீர்க்கும் கரமெங்கே
ராஜாவின் நடையெங்கே
ராகதாளப் பாட்டுமெங்கே!

எங்கே எங்கேயென
ஏங்கித் தவிக்கிறோம்
இங்கே இங்கேயென
எழுந்தோடி வாருமய்யா!

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.