பதிவு செய்த நாள்
07
ஆக
2015
04:08
ராஸக்ரீடை -3
1. ஸ்புரத் பர ஆநந்த ரஸ ஆதமகேந
த்வயா ஸமாஸாதித போக லீலா:
அஸீமம் ஆனந்த பரம் ப்ரபந்நா
மஹாந்தம் ஆபு: மதம் அம்புஜ அக்ஷய:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரிபூர்ண ஆனந்தமயமாக உள்ள நீ அந்த கோபிகைகளுக்கு இன்பமான லீலைகளை அளித்தாய். இதனால் தாமரை போன்ற அழகிய மலர்ந்த கண்களை உடைய அவர்கள் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். இதனால் அவர்கள் மனதில் ஓரளவு கர்வம் தோன்றியது அல்லவா?
2. நிலியதே அஸௌ மயி மயி அமாயம்
ரமா பதி: விச்வ மந: அபிராம:
இதி ஸ்ம ஸர்வா: கலித அபிமாநா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹித: அபூ:
பொருள்: குருவாயூரப்பா! அந்தக் கோபிகைகள் தங்கள் மனதில் உலகில் சிறந்த அழகு உடையவனும், மஹாலக்ஷ்மியின் கணவனும் ஆகிய இவன் என் மீது அதிகம் அன்பு வைத்துள்ளான். என்ற ஒவ்வொருவரும் நினைத்தனர். இதனால் அவர்கள் கர்வம் மிகுந்தது. இதனை நீக்க எண்ணியவனாக நீ திடீரென மறைந்து விட்டாய்.
3. ராதா அபிதாம் தாவத் அஜாத கர்வாம்
அதிப்ரியாம் கோப வதூம் முராரே
பவாந் உபாதாய கத: விதூரம்
தயா ஸஹ ஸ்வைர விஹார காரீ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முராரியே! அந்த நேரத்தில் ராதை என்னும் கோபிகை மட்டும் எந்த விதமான கர்வமும் இன்றி, உன் மீது உண்மையான அன்புடன் இருந்தாள். (இதனை உணர்ந்த) நீ அவளை மட்டும் அழைத்துச் கொண்டு வெகுதூரம் சென்றாய். அங்கு அவளுடன் மட்டும் தனித்து விளையாடி மகிழ்ந்தாய் அல்லவா?
4. திரோஹிதே அத த்வயி ஜாத தாபா:
ஸமம் ஸமேதா: கமல ஆயுத அக்ஷ்ய:
வநே வநே த்வாம் பரிமார்கயந்த்ய:
விஷதாம் ஆபு: பகவந் அபாரம்
பொருள்: பகவானே! குருவாயூரப்பா! நீ மறைந்து விட்டதும் தாமரை போன்ற கண்களை உடைய அந்தக் கோபிகைகள் துன்பம் அடைந்தனர். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு உன்னைத் தேடத் தொடங்கினர். உன்னைக் காணாமல் கவலை அடைந்தனர்.
5. ஹா சூத ஹா சம்பக கர்ணிகார
ஹா மல்லிகே மாலதி பால வல்ய:
கிம் வீக்ஷித: நோ ஹ்ருதய ஏக சோர:
இதி ஆதி தா: த்வத் ப்ரவணா: விலேபு:
பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் வரும் வழியில் தென்பட்ட ஒவ்வொன்றையும் கண்டு. மா மரமே! செண்பக மரமே! முருங்கை மரமே! மல்லிகைக் கொடியே! மாலதிக் கொடியே! தளிர் கொடியே! எங்கள் இதயத்தைக் கவர்ந்த கள்வன் எங்கு போனான்? நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டபடி உன்னை நினைத்து வருத்தம் உற்றனர்.
6. நிரீக்ஷித: அயம் ஸதி பங்கஜ அக்ஷ:
புர: மம இதி ஆகுலம் அலபந்தீ
த்வாம் பாவநா சக்ஷுஷி வீக்ஷ்ய காசித்
தாபம் ஸகீநாம் த்விகுணீ சகார
பொருள்: குருவாயூரப்பா! அந்த நேரத்தில் ஒரு கோபிகை மட்டும் உன்னைத் தன் ஞானக் கண்களில் கண்டாள். அவள் மற்றவர்களிடம், தோழிகளே! தாமரை போன்ற அழகிய கண்கள் உடையவனை நான் இப்போது கண்டேன் என்றாள். இதனைக் கேட்ட மற்றவர்களின் துன்பம் பல மடங்கு ஆகியது.
7. த்வத் ஆத்மிகா: தா யமுநா தட அந்தே
தவ அநுசக்ரு: கில சேஷ்டிதாநி
விசித்ய பூய அபி ததா ஏவ மாநாத்
த்வயா விமுக்தாம் தத்ருசு: ச ராதாம்
பொருள்: குருவாயூரப்பா! உன்னிடம் தங்களை ஒப்படைத்தவர்களான அந்தக் கோபிகைகள் நீ இதுவரை செய்து வந்த லீலைகளை செய்து பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் மீண்டும் உன்னைத் தேடத் தொடங்கினர். அப்போது உன்னால் கர்வத்தின் காரணமாக கைவிடப்பட்ட ராதையைக் கண்டனர் அல்லவா?
8. தத: ஸமம் தா: விபிநே ஸமந்தாத்
தம: அவதார அவதி மார்க்யந்த்ய:
புந: விமிச்ரா யமுநா தட அந்தே
ப்ருசம் விலேபு: ச ஜகு: குணாந் தே
பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் அனைவரும் ராதையுடன் சேர்ந்து கொண்டு நன்றாக இருட்டும் வரை அந்தக் காட்டில் உன்னைத் தேடினார்கள். மீண்டும் யமுனையில் கரையில் ஒன்று சேர்ந்தனர். உன்னைக் காணாமல் அழுதவர்களாக, உனது லீலைகளைப் புகழந்தவர்களாகப் பாடினர்.
9. ததா வ்யதா ஸங்குல மா நஸாநாம்
வ்ரஜ அங்கநாநாம் கருணா ஏக ஸிந்தோ
ஜகத் த்ரயீ மோஹந மோஹந ஆத்மா
த்வம் ப்ராதுராஸீ: அயி மந்த ஹாஸீ
பொருள்: குருவாயூரப்பா! கருணாமூர்த்தியே! இப்படியாக மிகுந்த துயரத்தில் மனம் வேதனையுற்று அவர்கள் இருந்தனர். அப்போது மூன்று உலகங்களையும் மயக்கும்படியான அற்புதமான அழகான நீ, அவர்கள் முன்பாக சிரித்தபடி நின்றாய் அல்லவா?
10. ஸந்திக்த ஸந்தர்சநம் ஆத்ம காந்தம்
த்வாம் வீக்ஷ்ய தந்வ்ய: ஸஹஸா ததாநீம்
கிம் கிம் நநசக்ரு: ப்ரமதா அதிபாராத்
ஸ: த்வம் கதாத் பாலய மாருத ஈச
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்கள் மீண்டும் உன்னைக் காண்போமா என்ற ஐயத்துடன் இருந்தனர். அப்படி அவர்கள் நினைத்திருக்கும்போது, நீ மீண்டும் தோன்றினாய். உன்னைக் கண்ட ஆனந்தத்தில் அவர்கள் விரைந்து என்ன என்ன செய்யவில்லை? இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்று.
ராஸக்ரீடை-4
1. தவ விலோகநாத் (க்ருஷ்ணா) கோபிகா ஜநா:
ப்ரமத ஸங்குலா: (க்ருஷ்ணா) பங்கஜ ஈக்ஷணா:
அம்ருத தாரயா (க்ருஷ்ணா) ஸம்ப்லுதா: இவ
ஸ்திமிததாம் தது: (க்ருஷ்ணா) தவத் புர: கதா:
பொருள்: (இந்த தசகத்தில் உள்ள அனைத்து ஸ்லோகங்களிலும் அடைப்புக்குறிக்குள் க்ருஷ்ணா என்ற பதம் உள்ளது. நாராயணபட்டத்ரி தமது மூலத்தில் இப்படி எழுதவில்லை. இருந்தாலும் பாகவதத்தை ஒட்டி இந்த முறையில் பாடம் செய்யப்படுகிறது). க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரை போன்ற மலர்ந்த அழகான கண்களை உடையவனே! மீண்டும் உன்னைக் கண்ட கோபிகைகள் மிகவும் மகிழ்ந்தனர். ஆனந்தக் கண்ணீர் பெருக. அமிர்தத்தால் குளித்ததுபோல் பேரானந்தத்தில் மூழ்கினர். உனது முன்னால் என்ன செய்வது என்று அறியாது அப்படியே அசைவில்லாமல் நின்றனர் அல்லவா?
2. ததநு காசந(க்ருஷ்ணா) த்வத் கர அம்புஜம்
ஸபதி க்ருஹ்ணதீ (க்ருஷ்ணா) நிர்விசங்கிதம்
கந பயோதரே (க்ருஷ்ணா) ஸம்விதாய ஸா
புலக ஸம்வ்ருதா(க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! சற்று நேரம் கழிந்தது. அப்போது ஒரு கோபிகை சிறிதும் தயக்கம் இல்லாமல் உனது தாமரை மலர் போன்று சிவந்த அழகிய கைகளை பிடித்துக் கொண்டாள். அதனை மெல்ல எடுத்து தனது பெரிய ஸ்தனங்களின் மீது வைத்துக்கொண்டாள். உடல் எங்கும் சிலிர்க்கத் தன்னை மறந்து நின்றாள் அல்லவா?
3. தவ விபோ அபரா(க்ருஷ்ணா) கோமலம் புஜம்
நிஜ கல அந்தரே (க்ருஷ்ணா) பர்ய வேஷ்டயத்
கல ஸமுத்கதம் (க்ருஷ்ணா) ப்ராண மாருதம்
ப்ரதி நிருந்ததீவ (க்ருஷ்ணா) அதி ஹர்ஷுலா
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் நிறைந்தவனே! மற்றொரு கோபிகை உனது மலர் போன்ற மென்மையான புஜங்களை எடுத்து தனது கழுத்தில் சுற்றிக் கொண்டாள். தன் கழுத்தில் இருந்து வெளியே கிளம்பும் மூச்சை நிறுத்த எண்ணினாள் போல இருந்தது.
4. அபகத த்ரபா(க்ருஷ்ணா) காபி காமிநீ
தவ முக அம்புஜாத் (க்ருஷ்ணா) பூக சர்விதம்
ப்ரதி க்ருஹய்ய தத் (க்ருஷ்ணா) வக்த்ர பங்கஜே
நிதததீ கதா(க்ருஷ்ணா) பூர்ண காமதாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மற்றொரு கோபிகை, உனது தாமரை மொட்டு போன்ற வாயில் நீ மென்று கொண்டிருந்த வெற்றிலையை எடுத்தாள். அதனை அப்படியே தனது வாயில் போட்டுக் கொண்டாள். தனது விருப்பம் அனைத்தும் நிறைவேறி விட்டதாக மகிழ்ந்தாள் அல்லவா?
5. விகருணோ வநே (க்ருஷ்ணா) ஸம்விஹாய மாம்
அபகத: அஸிகா(க்ருஷ்ணா) த்வாம் இஹ ஸ்ப்ருசேத்
இதி ஸரோஷயா(க்ருஷ்ணா) தாவத் ஏகயா
ஸஜல லோசநம்(க்ருஷ்ணா) வீக்ஷித: பவாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மற்றும் ஒரு கோபிகை உன்னிடம், எங்களை இந்தக் காட்டில் சிறிதும் இரக்கம் என்பதே இல்லாமல் தனியாகத் தவிக்க விட்டுப் போனாயே! உன்னை யார் தொடுவார்கள்? என்று கண்ணீர் மல்க மிகுந்த கோபத்துடன் கூறினாள்.
6. இதி முதா ஆகுலை; (க்ருஷ்ணா) வல்லவீ ஜநை;
ஸமம் உபாகத:(க்ருஷ்ணா) யாமுநே தடே
ம்ருது குச அம்பரை: (க்ருஷ்ணா) கல்பித ஆஸநே
குஸ்ருண பாஸுரே (க்ருஷ்ணா) பர்ய சோபதா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக பல கோபிகைகள் பலவிதமாக ஆனந்தம் அடைந்தனர். நீ அனைவருடனும் யமுனை நதியின் கரைக்கு வந்தாய். மென்மையான, குங்குமம், மஞ்சள் படிந்த தங்கள் மேல் ஆடைகளால் நீ அமர்வதற்கான இருக்கை ஒன்று செய்தனர். அந்த இருக்கையில் நீ அழகாக விளங்கினாய் அல்லவா?
7. கதி விதா க்ருபா (க்ருஷ்ணா) கே அபி ஸர்வத:
த்ருத தய: உதயா (க்ருஷ்ணா) கேசித் ஆச்ரிதே
கதிசித் ஈத்ருசா(க்ருஷ்ணா) மாத்ரு சேஷு அபி இதி
அபிஹித: பவாந் (க்ருஷ்ணா) வல்லவீ ஜநை:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவர்கள் உன்னிடம், க்ருஷ்ணா! கருணை என்பது பலவிதமாக உள்ளதே! சிலர் தங்களை அண்டியவர்களிடம் மிகுந்த இரக்கம் கொண்டு கருணையுடன் உள்ளனர். வேறு சிலரோ, நாங்கள் உன்னிடம் சரணம் என்று புகுந்தது போல் புகுந்தாலும் உன்னைப் போன்று இரக்கம் காட்ட மறுக்கின்றனரே! என்று கூறினார்கள்.
8. அயி குமாரிகா (க்ருஷ்ணா) ந ஏவ சங்க்யதாம்
கடினதா மயி (க்ருஷ்ணா) ப்ரேம காதரே
மயி து சேதஸ: (க்ருஷ்ணா) வ: அநுவ்ருத்தயே
க்ருதம் இதம் மயா (க்ருஷ்ணா) இதி ஊசிவாந் பவாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம் சமாதானமாக, அன்பான பெண்களே! என்னிடம் உங்கள் அன்பு குறைந்து விடுமோ என்று எண்ணி அஞ்சுபவன் நான், ஆகவே என்னுடைய மனம் கல்லானது. கடினமானது என்று எண்ண வேண்டாம். உங்களுக்கு என்னிடம் உள்ள அன்பும் பக்தியும் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று எண்ணினேன் அதனால் மறைந்தேன் என்றாய்.
9. அயி நிசம்யதாம் (க்ருஷ்ணா) ஜீவ வல்லபா:
ப்ரியதம: ஜந: (க்ருஷ்ணா) ந ஈத்ருச: மம
தத் இஹ ரம்யதாம் (க்ருஷ்ணா) ரம்ய யாமிநீஷு
அநுபரோதம் இதி (க்ருஷ்ணா) ஆலப: விபோ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா நீ அவர்களிடம் எனது உயிரை விட எனக்குப் ப்ரியமானவர்களே! இந்த உலகில் உங்களை விட எனக்குப் பிடித்தமானவர்கள் யாரும் கிடையாது. எனவே இன்று இரவு முழுவதும் இங்கு நீங்கள் மகிழ்வுடன் என்னுடன் விளையாடி மகிழலாம் என்றாய்.
10, இதி கிரா அதிகம் (க்ருஷ்ணா) மோத மேதுரை:
வ்ரஜ வதூ ஜநை: (க்ருஷ்ணா) ஸாகம் ஆரமந்
கலித கௌதுக: (க்ருஷ்ணா) ராஸ கேலநே
குரு புரீபதே (க்ருஷ்ணா) பாஹி மாம் கதாத்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ இப்படிக் கூறியவுடன் அந்த வ்ரஜ பூமியின் பெண்கள் மிகவும் மகிழ்ந்தனர். அவர்களுடன் சேர்ந்து நீ இனிமையாக ராஸக்ரீடையில் மகிழ்ந்தாய். இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காக்க வேண்டும்.
ராஸக்ரீடை -5
1. கேச பாத த்ருத பிஞ்சிகா விததி
ஸஞ்சலந் மகர குண்டலம்
ஹார ஜால வநமாலிகா லலிதம்
அங்கராக கந ஸௌரபம்
பீத சேல த்ருத காஞ்சி காஞ்சிதம்
உதஞ்சத் அம்சுமணி நூபுரம்
ராஸ கேளி பரிபூஷிதம் தவ
ஹி ரூபம் ஈச கலயாமஹே
பொருள்: ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த ராஸக்ரீடை நிகழ்வுக்காக நன்கு அலங்கரித்துக் காணப்பட்டாய். உனது தலையில் இருந்த கொண்டையில் மயில் பீலிகள் அழகாக சொருகப்பட்டிருந்தன. காதுகளில் மகர குண்டலங்கள் அழகாக அசைந்தன. உனது திருமார்பில் பூசப்பட்டிருந்த சந்தனம் நறுமணம் வீசியது. உனது இடுப்பில் அழகான பட்டுப் பீதாம் பரமும், அதன் மேல் ஒட்டியாணமும் காணப்பட்டது. உன்னுடைய அழகிய கால்களில் இரத்தினக் கற்கள் பதித்த தண்டைகள் ஒளி வீசின. இப்படிப்பட்ட எழில் பொங்கும் உனது அழகை, உருவத்தை நான் த்யானம் செய்கிறேன்.
2. தாவத் ஏவ க்ருத மண்டநே கலித
கஞ்சுலீக குசமண்டலே
கண்ட லோல மணி குண்டலே யுவதி
மண்டலே அத பரிமண்டலே
அந்தரா ஸகல ஸுந்தரீ யுகளம்
இந்திரா ரமண ஸஞ்சரஞ்
மஞ்ஜுலாம் ததநு ராஸகேளிம அயி
கஞ்ஜ நாப ஸமுபாததா:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாயகனே! அந்த நேரத்தில் கோபிகைகள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டனர். தங்கள் ஸ்தனங்களில் ரவிக்கை அணிந்தும், காதுகளில் அணிந்த குண்டலங்கள் கன்னங்களில் வந்து ஆடும்படியாகவும் இருந்தனர். உன்னைச் சுற்றி அவர்கள் நின்றனர். அப்போது இரு கோபிகைகள் நடுவில் ஒரு க்ருஷ்ணன் என்று பலவாக நீ உருவெடுத்தாய். இப்படியாக நீ ராஸக்ரீடை என்னும் அந்த நாட்டியத்தைத் தொடங்கினாய்.
3. வாஸுதேவ தவ பாஸமாநம் இஹ
ராஸகேளி ரஸ ஸௌரபம்
தூரத: அபி கலு நாரத ஆகதிதம்
ஆகல்ய்ய குதுக ஆகுலா
வேஷ பூஷண விலாஸ பேசல
விலாஸிநீ சத ஸமாவ்ருதா
நாகத: யுகபத் ஆகதா வியதி வேகத:
அத ஸுர மண்டலீ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வாஸுதேவா! இதனைக் கண்ட நாரதர், க்ருஷ்ணனின் ராஸக்ரீடையால் யமுனையின் கரை ப்ரகாசமாக உள்ளது என்றார். நாரதர் இப்படிக் கூறியதைக் கேட்டதேவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் அனைவரும் பலவிதமான ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, தங்கள் தேவலோகப் பெண்களுடன் ஆகாய மார்க்கமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
4. வேணு நாத க்ருத தாந தாந கல
காந ராக கதி யோஜநா
லோபநீய ம்ருது பாத பாது க்ருது
தால மேளந மநோஹரம்
பாணி ஸங்க்வணித கங்கணம் ச முஹு
அம்ஸ லம்பித கர அம்புஜம்
ச்ரோணி பிம்ப சலத் அம்பரம் பஜத
ரதஸ கேளி ரஸ டம்பரம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இனிமையான புல்லாங்குழலின் ஒலியுடன் இணைந்தால் பாட்டின் ராகங்கள் இனிமையாக இருந்தன. அழகான மென்மையான பாதங்கள் அனைத்தும் ஒன்றாக வைத்து ஆடுவதால் தாளம் இனிமையாக இருந்தது. பெண்கள் கைகளில் அணிந்திருந்த வளையல் ஒலிகள் சுகமாக இசைத்தன. தாமரை போன்ற கைகளை அடிக்கடி தோளில் வைப்பதும் இறக்குவதுமாக நாட்டியம் காணப்பட்டது. இடுப்பில் உள்ள ஆடைகள் தானாகவே அழகாக அசைந்தன. இப்படி காண்பதற்கு இன்பம் விளைவிக்கும் ராஸக்ரீடையை நீங்கள் த்யானம் செய்து மகிழுங்கள். (என்று பட்டத்ரி நம்மிடம் கூறுகிறார்.)
5. ச்ரத்தயா விரசிதா நுகாந க்ருத
தார தார மதுர ஸ்வரே
நர்த்தநே அத லலித அங்கஹார லுலித
அங்கஹார மணி பூஷணே
ஸம்மதேந க்ருத புஷ்ப வர்ஷம் அலம்
உந்மிஷத் திவிஷதாம் குலம்
சிந்மயே த்வயி நிலீயமாநம் இவ
ஸம்முமோஹ ஸவதூகுலம்
பொருள்: க்ருஷ்ணா குருவாயூரப்பா! அந்த நாட்டியத்திற்கு ஏற்ப பின்பாட்டு மிகவும் இனிமையாகப் பாடப்பட்டது. இதனால் இனிமையான ஸ்வரங்கள் ஒலித்தன. நடனம் ஆடும்போது உண்டாகும் அசைவினால் முத்து மாலைகள், ரத்ன ஆபரணங்கள் அசைந்தன. இதனைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த தேவர்கள் தங்கள் மனைவிமார்களுடன் இணைந்து அந்த இடத்தின் மீது மலர்களைத் தூவினர். அவர்கள் கூட்டம் முழுவதும் உன் மீது அப்படியே ஒன்றி விட்டது.
6. ஸ்விந்ந ஸந்ந தநு வல்லரீ ததநு
காபி நாம பசுப அங்கநா
காந்தம் அம்ஸம் அவலம்பதே ஸ்ம
ப்ருச தாந்தி பார முகுல ஈக்ஷணா
காசித் ஆசலித குந்தலா நவ
படீர ஸார நவ ஸௌரபம்
வஞ்சநேந தவ ஸஞ்சுசும்ப புஜம்
அஞ்சித உரு புலக அங்குரம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த நேரம் ஒரு கோபிகை மிகவும் வியர்த்துக் களைப்படைந்தாள். அதனால் தனது அழகிய கண்களை மூடிக்கொண்டு, தனது கொடி போன்ற உடலுடன் உனது இனிய திருமேனி மீது சாய்ந்தாள். மேலும் ஒரு பெண் தனது கூந்தல் முழுவதும் அவிந்தவளாக, சந்தனம் மணம் வீசும் உனது கைகளை எடுத்து, அதனை முகர்ந்தாள். அதனால் மேலும் ஆனந்தம் அடைந்து அந்தக் கைகளை நன்றாக முத்தம் இட்டாள்.
7. காபி கண்ட புவி ஸந்நிதாய நிஜ
கண்டம் ஆகுலித குண்டலம்
புண்ய பூர நிதி: அந்வ வாய தவ
பூக: சர்வித ரஸாம்ருதம்
இந்திரா விஹ்ருதி மந்திரம் புவந
ஸுந்தரம் ஹி நடந அந்தரே
த்வாம் அவாப்ய தது: அங்கநா கிமு
ந ஸம்மத உந்மத தசாந்தரம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் கோபிகைகளில் ஒருத்தி, குண்டலங்கள் அசைகின்ற உனது அழகிய கன்னத்தின் மீது தனது கன்னத்தைப் பதிய வைத்துக்கொண்டாள். எத்தகைய புண்ணியம் செய்தவள் அவள்! மேலும் அவள், நீ வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை அமிர்தம் என்று பருகினாள் அல்லவா? மஹாலக்ஷ்மி விளையாடும் இடமாகவும், மூன்று உலகங்களிலும் மிகவும் அழகானதும் ஆகிய உனது திருமேனியில் சாய்ந்து, அதன் மூலம் அந்த கோபிகைகள் அடைந்த பேரானந்தம் என்னே! அவர்கள் இதன் மூலம் எந்த இன்பத்தை அனுபவிக்கவில்லை?
8. காநம் ஈச விரதம் க்ரமேண கில
வாத்ய மேளநம் உபாரதம்
ப்ரஹ்ம ஸம்மத ரஸ ஆகுலா:
ஸதஸி கேவலம் நந்ருது: அங்கநா:
ந அவிதந் அபி ச நீவிகாம் கிமபி
குந்தலீம் அபி ச கஞ்சுலீம்
ஜ்யோதிஷாம் அபி கதம்பகம்
திவி விலம்பிதம் கிம் அபரம் ப்ருவே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! இனிமையான பாட்டுக்கள், வாத்திய ஒலிகள் ஆகியவை படிப்படியாகக் குறைந்து ஓய்ந்தன. அப்போது அந்தப் பெண்கள் மிகுந்த பரவச நிலையில், பேரானந்தநிலையில் இருந்தனர். அத்துடன் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த நிலையில் தங்கள் கூந்தல், ரவிக்கை, உடை முதலானவை அவிழ்ந்து விழுந்ததைக் கூட உணரவில்லை. இப்படி ஓர் அற்புதமான நிலையைக் கண்டு வானில் உள்ள நட்சத்திரங்கள் அப்படியே திகைத்து நின்று விட்டதாகத் தோன்றியது. நான் வேறு எப்படி வர்ணிப்பது?
9. மோத ஸுமநி புவநம் விலாப்ய
விஹ்ருதிம் ஸமாப்ய ச தத: விபோ
கேளி ஸம்ம்ருதித நிர்மல அங்க
நவ கர்ம லேச ஸுபக ஆத்மநாம்
மந்மத அஸஹந சேதஸாம் பசுப
யோஷிதாம் ஸுக்ருத சோதித:
தாவத் ஆகலித மூர்த்தி
மார வீர பரம உத்ஸவாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! இந்த ராஸக்ரீடை மூலமாக உலகம் முழுவதும் பேரானந்தத்தில் மூழ்கும்படிச்செய்து விட்டு இந்த விளையாட்டை முடித்தாய். அந்தப் பெண்களின் மாசற்ற உடலில் உள்ள அவயங்கள் எங்கும் வியர்வை முத்து முத்தாக இருந்தது. இதனால் அவர்கள் மேலும் அழகாக விளங்கினார்கள். அவர்களால் மேலும் காதலைப் பொறுக்க முடியாமல் உனது மனதைக் கவர்ந்தனர். அவர்களின் தூய்மையான மனதாலும், புண்ணியத்தாலும், எத்தனை கோபிகைகள் இருந்தனரோ, அத்தனை க்ருஷ்ணனாக நீ பல உருவம் எடுத்தாய். அப்படி எடுத்து அந்த மன்மத நிகழ்வை நடத்தினாய் அல்லவா?
10. கேளி பேத பரிலோலிதாபி:
அதிலாலிதாபி: அபலா ஆலிபி:
ஸ்வைரம் ஈச நநு ஸுரஜா பயஸி
சாரு நாம விஹ்ருதிம் வ்யதா:
காநநே அபி ச விஸாரி சீதள
கிசோர மாருத மநோஹரே
ஸுர ஸௌரபமயே விலேஸித
விலாஸிநீ சத விமோஹதம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ அவர்களுடன் பலவிதமான இன்ப லீலைகளில் ஈடுபட்டாய். இதனால் அவர்கள் மிகவும் சோர்ந்தனர். அதன் பின்னர் அவர்களுடன் இணைந்து நீ யமுனை நதியில் ஜலக்ரீடை செய்தாய். அல்லவா? அந்த நேரம் குளிர்ந்த காற்று இதமாக வீசியது. அந்தக் காற்றில் மலர்களின் நறுமணம் இதமாகப் பரவியது. இதனால் அந்த நதிக்கரை மிகவும் அழகுடன் விளங்கியது. இந்த நிலையில் நீ அந்தப் பெண்களை மேலும் மயக்கும்படி செய்தாயாமே!
11. காமிநீ: இதி ஹி பாமிநீஷு
கலு காமநீயக நிதே பவாந்
பூர்ண ஸம்மத ரஸ அர்ணவம் கம்
அபி யோகி கம்யம் அநுபாவயந்
ப்ரஹ்ம சங்கர முகாந் அபி இஹ
பசுப அங்கநாஸு பஹுமாநயந்
பக்த லோக கமநீய ரூப கமநீய
க்ருஷ்ண பரிபாஹி மாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பகவானே! அழகானவனே! யோகிகளால் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த நிலையை நீ இப்படியாக அந்தக் கோபிகைகளுக்குக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கச் செய்தாய். இதனால்தானே அந்தக் கோபிகைகளை சிவனும் ப்ரும்மாவும் போற்றுகின்றனர். உன்னுடைய ஆத்மார்த்தமான பக்தர்களால் மட்டுமே இப்படி உன்னை அனுபவிக்க இயலும். அப்படிப்பட்ட க்ருஷ்ணா! பகவானே! என்று பிணிகளை நீக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும்.