பதிவு செய்த நாள்
30
ஆக
2025
11:08
பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் கடலுார் கடலில் விஜர்சனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
பண்ருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் விநாயகர் சிலைகள் கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கரைப்பதற்காக 35 வாகனங்களில் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பண்ருட்டி மார்க்கெட் கமிட்டி முன் இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் தொழிலதிபர் வைரக்கண்ணு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் 15 வாகனங்களில் விநாயகர் சிலைகள் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் படைவீட்டம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
பண்ருட்டி பஸ் நிலையம் முன் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மத நல்லிணக்க அடிப்படையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் போலீஸ் லைன் பள்ளிவாசல் முத்தவல்லி யாசீன் தலைமையில் ஏ.எல்.சி., சர்ச் சலோமி, ஜான்சிராணி ஆகியோர் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
மொய்தீன்கான், ஆதாம்கான், பசுலுதீன், பாபு, நுார்முகமது, ஏ.எல்.சி., செயலாளர் எசேக்கியல், பொருளாளர் ரூபன் உட்பட பலர் பங்கேற்றனர்.