ராமநாதபுரம்: ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ விழாவில் அர்ஜூனன், திரவுபதிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா ஆக.,24ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கி செப்.,5 வரை நடக்கிறது. தினமும் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வந்தனர். முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் திரவுபதி அம்மன், அர்ஜூனன் ஆகியோருக்கு திருக் கல்யாணம் நடந்தது.
மாலையில் திரு விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
செப்.,2ல் கீசகவதம், செப்.,3ல் அரவான் களப்பலி, செப்.,5ல் இரவு 10:00மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற வுள்ளது.