பதிவு செய்த நாள்
08
ஆக
2015
02:08
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் நாளை 9ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
விழாவையொட்டி, நாளை (9ம் தேதி) காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரமும், காலை 11 மணிக்கு கரகம் வீதியுலா நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு செடல் போடுதல், 5:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், இரவு 8:30 மணிக்குள் ரேணுகா பரமேஸ்வரிக்கு உடனுறை ஜமதக்கிமுனிவர்
திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
பின்னர், இரவு 9 மணிக்கு சுமங்கலி பூஜையும், வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து வரும் 16ம் தேதி ஆடிப்பூரம், சுமங்கலி பூஜை, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.