சின்னசேலம்: சின்னசேலம் செல்வமுருகன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குட அபிஷேகம் செய்தனர்.
சின்னசேலம் செல்வமுருகன் கோவிலில் 14ம் ஆண்டு ஆடி மாத உற்சவத்தையொட்டி, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. துர்க்கை அம்மன் குழு தலைவர் குருராஜ் தலைமையில் 108 பால்குடங்களை பக்தர்கள் ஏந்தி, தேரோடும் வீதிவழியாக ஊர்வலமாக சென்றனர். பின்பு கோவிலை அடைந்து, சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தது. தீபாரதனையை குருக்கள் பாலமுருகன் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்.