கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத குத்துவிளக்கு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக பெண் பக்தர்களின் குங்கும அர்ச்சனை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவிலில் மாதர் சங்க சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வேலு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.