பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில், ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது. செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலி ல், 43வது ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சிவசுப்பிரமணியருக்கு பால் மற்றும் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு காவடி அபிஷேகம், பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு, மிளகாய் பொடி அபிஷேகம், மார் மீது மாவு இடித்தல், மழுவேந்தல், கடப்பாறை உருவுதல், செடல் சுற்றல், தீமிதித்தல், வெறும் கையால் வடை சுடுவது, பறவை காவடியாக ஆகாய மார்க்கமாக பக்தர்கள் சாமிக்கு மாலை அணிவித்தனர். மாலை 6:00 மணிக்கு காவடி ஊர்வலம், தேர் இழுத்தல், வேன், டிராக்டர் களை அலகு குத்தி இழுத்து வந்தனர். காந்தி பஜார் வழியாக நடந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.