கிள்ளை: கிள்ளை ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் வரும் 16ம் தேதி கஞ்சிக்கலய ஊர்வலம் நடக்கிறது. கிள்ளை கடைத்தெரு ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றம் சார்பில் வரும் 16ம் தேதி நாட்டில் அமைதி நிலவி, விவசாயம் செழிக்க மண்வளம், மழை வளம் சிறக்கவும் கஞ்சிக்கலய ஊர்வலம் நடக்கிறது. கிள்ளை சிந்தாமணியம்மன் கோவிலில் இருந்து மன்றத் தலைவி மீனாட்சிபாஸ்கர் தலைமையில் கஞ்சிக்கலய ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைகிறது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.