பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
ப.வேலூர்:பாண்டமங்கலம் மஹா மாரியம்மன், பகவதியம்மன் கோவிலில், ஆகஸ்ட், 14ம் தேதி, 1,008 பால்குட அபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலம் மஹா மாரியம்மன், பகவதியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமை, 1,008 பால்குட அபிஷேக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.இந்த ஆண்டு, 7ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா, வரும், 14ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு, வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் முன் உள்ள நான்கு கால் மண்டபத்தில் இருந்து, 1,008 பால்குடங்களை எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவிலை அடைகின்றனர்.அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அன்று மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.