பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக, அலகு குத்துதல், கரகம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.வைசிய நண்பர்கள் குழு சார்பில், முருகன் சூரசம்ஹாரம் செய்யும் அவதாரம் நிகழ்ச்சி தத்தரூபமாக வண்டி வேடிக்கையாக காட்சியளிக்கப்பட்டது. நெய்விளக்கு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் சார்பில், இரண்டு வண்டிகள் வந்தது. அதில், காலபைரவர் துஷ்டர்களை வதம் செய்வது, மகிசாசூரனை முப்பெரும் தேவியர் வதம் செய்யும் காட்சி வண்டி வேடிக்கையாக வந்தது. வாணிய வைசிய சமூகம் சார்பில், விதியை மதியால் வென்ற வெற்றிவிநாயகம் என, மொத்தம் எட்டு வண்டி கண்காட்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வண்டி வேடிக்கையை கண்டுகளித்தனர்.