பதிவு செய்த நாள்
10
ஆக
2015
12:08
பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற, மைசூரு தசரா உற்சவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க, பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று, உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பெங்களூரு விதான் சவுதாவில், மைசூரு தசரா உற்சவ முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி, மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ண தத்த சாமராஜ உடையாருக்கு, பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் சீனிவாஸ் பிரசாத், மஹாதேவப்பா, மைசூரு மாவட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.