பத்ர காளியம்மன் கோவிலில் ஆடிமாத பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2015 01:08
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் ஆடிமாத பெருவிழா துவங்கியது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிமாத சிறப்பு பால்குடம், அக்னிச்சட்டி, மயானசூறைத் திருவிழா கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருவீதியுலாவும், 16ம் தேதி காலை 108 பால்குட ஊர்வலம், 108 அக்னிச்சட்டி எடுத்தல், காலை 10:30 மணிக்கு காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு மயானசூறை விடுதல், மதியம் 3:00 மணிக்கு பத்ர காளியம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதையடுத்து 16ம் தேதி வரை பாரதப்பூசாரி மயில்முருகன் தலைமையில் பாரதப்பிரசங்கம் நடக்கிறது.