விழுப்புரம்: விழுப்புரம் மொட்டை மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது. விழுப்புரம் பூந்தோட்டம், மேட்டுத் தெருவிலுள்ள சு யம்பு மொட்டை மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா, நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாம்பழப்பட்டு ரோட்டிலுள்ள செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, Œக்தி கரகம் ஜோடித்து வீதியுலா வந்தது. பின் சாகை வார்த்தல் நடந்தது. இதனை தொடர்ந்து காத்தவராயனுக்கு கும்பசாதம் படையலிட்டு, இரவு 9:00 மணிக்கு, வீதியுலா நடந்தது. கோவில் நிர்வாகி ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.